முகநூல் பதிவு 237
20.12.2018
இன்றைய மாலைப் பொழுது மிக அழகானப் பொழுதாக அமைந்தது..... அன்புத் தோழி Narthaki Nataraj அவர்களை நேரில் சந்தித்தத் தருணம்.... பார்த்தவுடன் பூத்தப் புதுமலரை கண்டப் பூரிப்பு..... மேடைக்குச் செல்ல தயாராக அமர்ந்திருந்தார்.....ஆஹா...! கவிதாயினி என்று சொல்லிக் கொண்டே நிறைந்த பௌர்ணமியாய் எழுந்து வந்தார்..... இதுதான் அவர்களுடன் என் முதல் சந்திப்பு.... முதல் சந்திப்பிலேயே என் இதயத்தை முழுதாய் கவர்ந்துவிட்டார்..... அன்பின் உச்சம்..... அழகின் அம்சம்....கனிந்தக் குரல்...... காந்தப் பேச்சு....நாட்டியத்தை அமர்ந்து பார்க்க எனக்கு நேர அவகாசம் இல்லாமல் போனது சற்று வருத்தமே..... ஆனால் நாம் மீண்டும் மீண்டும் சந்திப்போம்.... நிறைய பேசுவோம் தோழி.....ஏதோ ஒரு ஜென்மம் தொடர்பு நம்மிடையே உள்ளது....
இரட்டிப்பு மகிழ்ச்சியாய் நீண்ட நாட்களுக்குப்பின் அன்புத்தோழி உலகம்மாள் அவர்களை சந்தித்தது.... ஆனால் அவர்களிடமும் அதிக நேரம் பேசமுடியவில்லை.....அடுத்தவாரம் சந்திப்போம் உலகு.....

