செந்தமிழும் முருகும்

செந்தமிழும் முருகும்

பதினான்கு சீர் விருத்தம்


எந்தமிழ் அகத்தியன் படைத்தது செந்தமி
ழெனத்தெரிந் துணர்வாய்த் தமிழா

சிந்தையாய் தமிழர சரும்வளர்த் ததமிழை
பெரும்புல வர்கள் படைத்தார்



எந்தையாம் முருகனைத் தமிழரும் சேவிக்கா.
விடுத்ததேன் சொல்வாய் தமிழா

எதிர்வரும் கடவுளர் பலரையும் தொழுதனை
எமதுயிர் முருகு மறந்தாய்


சொந்தமென் றெதையுமே தெரிந்திடா துறந்தனை.
யுனதுதெய் வமுரு கையும்

ஓருமுரு கனைமறந் துருப்படாய் தமிழனே
உருமுரு கனடா தமிழா


சிந்தையை கலைத்துமே பலருனை இழுத்ததை இகழ்ந்திடு தம்பி தங்காய்

திரும்பவந் திடுத்தமிழ் முருகையும் தொழுதிடு
திரும்பவும் யேற்போம் நாமே



.......

எழுதியவர் : பழனிராஜம் (8-Jan-21, 2:58 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 87

மேலே