பெற்றத்தாய்

பெற்றத்தாய்

நேரிசை வெண்பாக்கள்

தாரணியில் தந்தைத்தாய் கூடித் தரித்தவுயிர்
பாரம் வளர்ந்தது பத்துமாதம் -- பாரத்தை
தாயும் இறக்கிவைத்து சாய்ப்பதெங்கு வாகாதே
வாயும் வயிரானாள் பார்

சிற்றிடைக் காணா மறைந்துசூ னாவயிற்
சற்றும் சளைக்காது மூச்சிறைத்தாள் -- நற்றவத்தாள்
கற்காப்பெற் றாள்பின் சிறுநகை பூத்திட்டாள்
உற்றசெவி லிக்காணா தேபலகலைகள் சிந்துபாடி பாங்கிக் கரத்தை
விலக்கியெனை முத்தமிட்டா ரள்ளி -- நலமாகத்
தாயும் மடிகிடத்திக் கொங்கைமலர் பாலூட்ட
சேயும் அயர்ந்தது கண் (கா,)


பணியை சடுதி முடித்துநன்நீ ராட்டி
நணிமையில்மை வைப்பள் திலதம் -- துணிந்த
யணிதுணி மெல்லியனிச் சையாம் தரித்து
பிணிவராக் காத்தாளென் தாய்

.........

எழுதியவர் : பழனிராஜன் (6-Jan-21, 7:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 321

மேலே