என்னுயிர் சுவாசமே

பேருந்துப் பயணத்திலே
முன்னிருக்கை அமர்ந்தவளே /
பேரழகைக் காட்டி
பேரதிர்ச்சி கொடுத்தவளே /

பாவாடை தாவணியிலே
பாராமல் போனவளே /
பாவியென் நெஞ்சத்தைக்
கிள்ளிச் சென்றவளே/

துள்ளிடும் ஆசைகளோ
உலாவுதடி சின்னவளே/
துரத்திடும் ஏக்கமும்
எனையிறுக்குதடி என்னவளே/

கண்ணால் பறித்தெடுத்து
மனதினிலே விதைத்தேனடி /
கண்ணீர் ஊற்றியே
மரமாக வளர்த்தேனடி/

காலமும் கடப்பதினால்
கவலையும் பிறக்கின்றதடி /
பேச்சு இழந்து
மூச்சடைச்சுப் போகையிலும்/

காற்றைத் துரத்தி
உன்னைக் காத்திருக்கேனடி/
உடலோடு கலந்திடு
என்னுயிர் சுவாசமே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Jan-21, 1:02 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 402

மேலே