முருகு என்ற மொழி

முருகே அழகே எழிலே சிறந்த அறிவே
மயக்கும் நிலையே முதிர்ந்த மொழியே
தெளிவே நினைவே மலரே கனியே
மெய்யே உயிரே அணுவே அதனுள் கடலே
சொல்லே செயலே தூய நிலையே
விண்ணே வெய்யிலே வீசுந்தென்றலே
ஆழ்கடல் முத்தே தேனே நெய்யே
வீரமே தீரமே மறமே மாண்பே மருந்தே
மழையே பனியே பருவமே பரவச நிலையே
சோலையே நற்சூழலே ஞானமே மனமே
ஊணினை காக்கும் உதிரமே பெருமையே
தானாய்த் தோன்றிய தமிழே மூலமே
பயிரே கதிரே பழங்களின் கலவையே
பற்கலைகளின் வித்தே பழமொழியே
அழிவற்ற நிலையே அண்டங்களின் இறையே
நீள் ஆயுள் நிலையே நிறையறிவின் வளமே
போற்றினோம் உம்மை புலனடங்கி போற்றினோம்
ஊற்றின் நீர் ஓட்டமாய் போற்றுந்தமிழை
எமக்கீன்றி நீள் நாட்கள் வாழ் நூல் படைக்க
தோள் இணைத் தோழனாக எனைக்கொள்வாய்
மலை மீதமர்ந்த வேல்முருகா பாதம் பணிந்தே நான்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Jan-21, 11:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 51

மேலே