தமிழை எழுப்பிவிடு

தமிழை எழுப்பிவிடு

நேரிசை ஆசிரியப்பா

எத்தனைத் தமிழர் எத்தனை வித்தகர்
இத்தமிழ் நாட்டின் இன்னல் அத்தனை
மொத்தமும் சொல்வேன் பாரு சொத்தை
வெத்து வேட்டையும் காட்டுவேன்
வித்தை யில்லை ஆசிரியப் பாவிலே

நேரிசை ஆசிரியப்பா

கம்பனை தலையில் வைப்பான் ஆனால்
கம்பன் கொண்ட சரசுவதித் தொழான்பார்
வம்பாய் ராமனைத் தொழாத் தூற்றுவன்
கண்ணகி பத்தினி யாயென நகைப்பன்
தமிழில் கவிதை எழுதுவன் சாமி
யேதுபூ தமேதென்பான் ஏத்துவது பிரியாணி

நேரிசை ஆசிரியப்பா

வள்ளுவன் வழியில் வாழ்வோம் என்பான்
வள்ளுவன் கடவுளைப் பாடவில்லை என்பான்
கடவுள் வாழ்த்தை சுட்டிக் கேட்டால்
தகப்பன் அண்ணன் பாதையது என்பான்
அத்தனை தமிழ்வாத்தி மௌனியாம் உண்மை
தமிழ்வேள் சாமி யில்லை அத்தி
முகனும் சாமி யில்லை என்பான்
தமிழை கற்று பெஸ்கியென் முடித்தான்
தமிழ்சாமி அத்தனை யொழித்தான்
தமிழில் யேசு புராணம் செய்தானே

முருகையும் வணங்காத் தமிழ்த்தேவ நேய
பாவலர் இவரே சமஸ்கிரு தப்புலி
இவரே பப்பான் தமிழ்விரோ தியென்றது
தமிழின் ஆசிரியர் இவரால் கெட்டார்
தேவாம் பனிபெஸ்கி தேவநேயர் வல்லவர்
சிலுவைப் பாடகன் தேவநேயப் பண்டிதன்
சமஸ்கி ருதப்புலியாம் சரியென சொல்வதார்
ஆரியன் பற்றி வேதத்தில் படித்தாரம்
தமிழில் இயேசு புராணம் பெஸ்கி
தமிழில் நபிப்புராணம் உமரும் எழுத
தமிழ்சாமி மறந்தார் நம்மவர்
தண்டச் சம்பளம் தமிழின் பண்டிதரே


நேரிசை ஆசிரியப்பா

தமிழா சிரியரில் பலரும் முட்டாள்
பெஸ்கி தேவநேயன் பரவாயில் லையாம்
உமறுப் புலவரும் பரவா யில்லை
பார்ப்பான் ஐயோக் கியனாம் சொல்லியே
தமிழையும் தமிழ்சாமி யையும்
தமிழா சிரியரே கொன்று புதைத்தாரே

நேரிசை ஆசிரியப்பா


பாப்பான் ஒழிக என்றது. இவரே
தேவ நேய பாவா ணரிந்து
கிருத்துவர் ஒருவர் வளர்த்தார் அவரே
அவரைக் கிருத்துவந் தழுவச் செய்தாராம்
ஆனார் ஆறாம் வகுப்பு ஆசிரியர்
அனைத்தும் பின்பு கற்று தேர்ந்தாராம்
நாற்பது மொழியில் செய்தார் ஆராய்ச்சி
அறுபதா யிரம்பாடல் ரிக்காம் வேதம்
அனைத்தும் கரைத்து குடித்தாராம்
தமிழர் எதிரிபாப்பான் என்றது இவரே

நேரிசை ஆசிரியப்பா

பதிநான் காம்நூற் றாண்டில். நம்நாட்டை
மாலிகா பூர்கொள்ளை யிட்டு நாட்டில்
முஸ்லீம் ஜமின்கள் உண்டாக் கிவைத்தான்
சீதக்காதி ஜமீனும் உமருக்குத் தந்து
சீறாப் புராணம் செய்தசரித் திரமாம்
கால்ட்வெல் காலத்தில் கிருஷ்ண பிள்ளை
இரட்சிணி யாத்ரிகம் செய்தான்
கிறித்துவம் தமிழுக்கு பெருமை தந்ததாமே

நேரிசை ஆசிரியப்பா

தமிழன் வாயா டிகளின் பேச்சில்
லயித்து தமிழை மறந்தான் கிருத்துவர்
தமிழில் மேரியை இயேசுவை வளர்த்தார்
தமிழில் கிருத்துவம் வளர்த்தார் பாரு
ஐம்பது கிருத்து புராணம் செய்தாரே
தேவ நேயன் பாப்பான் ஒழிக
என்றதைப் பெரிதாக்கி தமிழரை கெடுத்தார்
தமிழ்கலா சாரம் அழிந்தது
தமிழ்மொழி கடவுள் எல்லாம் அழித்தாரே

(கவிஞர் பழ்னிராஜன்)

எழுதியவர் : பழனிராஜன் (19-Jan-21, 4:10 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 162

மேலே