உற்சாக உணர்வில்

நிலைமண்டில ஆசிரியப்பா

உணவென்ற ஒன்று பிணமான பின்பே
உடலினால் செரித்து உயிரை வளர்த்து
ஊற்றின் ஓட்டம் போலவே இயக்கி
உற்சாக உணர்வில் எப்போதும் வைக்குமே

ஊனினை உணவென்று உண்ணும் உண்ணிகள்
உடலினுள் உணர்வென்று ஒன்றும் உள்ளதாய்
உன்னதமாய் உண்டுபண்ண உலகின் ஆதியை
உள்ளம் உருகவே தொழுக ஓம்பியே.

ஒருநாளில் நீரினுள் மூழ்கிட தவிர்த்தால்
ஒவ்வா நாற்றமே உடலைச் சூழ்ந்திடும்
ஓரறிவு மரத்தின் நறும்பட்டை காத்திடும்
ஓங்கிய உடம்பை மரமே தாய்

நேர்மையின் மறுவுறு நெருப்பே உள்கொள்க
பாரபட்சம் கொள்ளா மலேயே கொல்லும்
பாரினுள் பணங்கொண்டோர் பயன்படுத்தும் எதுவும்
பயனற்று நீங்கியே ஒதுங்கி ஒடுங்குமே
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (19-Jan-21, 8:33 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : urchaaga unarvil
பார்வை : 110

மேலே