சித்திரமே பத்திரம்

சித்திரமே பத்திரம்
நுட்பம் நிறை கலை
உற்று நோக்குமிடத்து
நம்முன் வாழ்ந்தோரின்
அர்த்தமுள்ளதும் அறிவாற்றலும்
ஆட்சியின் வடிவமும்
கொடுங்கோலின் வீழ்ச்சியும்
அதில் சிக்கித் தவிக்கும்
மக்களின் அலங்கோலங்களும்
அவலங்களின் வெளிப்பாடும்
கண்கூடாக கண்டுணர தருகின்ற
சித்திரங்கள் அதன் உணர்வுகள்
நம்முள் உணர்வுகளின் வலிமையை
தூண்டுகின்றதே,
அன்பின், ஆக்ரோஷத்தின்,, ஆதங்கத்தின்
அதுமட்டுமா/
பொறுமையின் பூரிப்பில்
அழகில் , ஒழுக்கத்தில் ,ஒருமைப்பாட்டில்,
மனிதன் வாழ்ந்த வாழுகின்ற
ஆட்சிசெய்கின்ற நேர்மையின்
தத்துவங்களையும் அணியணியாய்
செதுக்கித்தான் நம்மிடத்தில்
தருகின்ற சித்திரத்தின் மகிமையை
என்னவென்று சொல்ல
சித்திரமே நற்பத்திரம்.
நாமறியா சான்றுதனை நாடித்தரும்
சித்திரமே பத்திரம் .

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Jan-21, 11:05 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : sithirame pathiram
பார்வை : 70

மேலே