சிலம்பின் கருத்து
சிலம்பின் கருத்து
நேரிசை ஆசிரியப்பா
அரசியல் பிழைத்தவர் யெவரெனப் பாரா
அறமே தண்டனைத் தருமாம் பத்தினிப்
பெண்டிரை தெய்வமும் பதிலுரை செய்யும்
முன்வினைத் தொடர்ந்து வந்து தண்டிக்கும்
என்பது பொதுவில் விதியாம்
இன்றும் விளக்கிடும் சிலப்பதி காரமே
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்ணகியின் கால்சிலம்பை விற்றுவரும்
காசில்தன் புதுவாழ் கையை
கண்டிடப்பு கார்விட்ட கோவலனும்
தண்டிப்பில் கொலையுண் டானே
கொண்டகன்சாக் காடுகேட்டக்
கண்ணகிமா நகரெ ரிக்க
விணணோனு டன்வெய்யோ னோர்குரலாய்
இல்லைக்கள் வனுமென் றாரே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
