குடியரசு தினம்

குடியரசு தினம்
மக்களால் மக்களை ஆளும் ஆட்சி மலர்ந்திட
மனதில் உறுதியோடு வாக்கில் தேசபக்தியோடு
மாய்ந்தனர் மகான்கள் வெள்ளையனை எதிர்கொண்டு
மாற்றானின் கோடுங்கோல் மறைத்தது எனக்கூவி
மாலை வேளையில் மனம் களித்து மலர்சூடி ஆடிப்பாடி
விடுதலை பெற்று வரும் பொழுதுகள் ஆனந்தமே என
ஆரவாரத்துடன் கொண்டாடி அனைவரும் அமைத்த
நல்ல குடியரசு மக்களுக்கு நன்மை பல செய்ய
மூவர்ண கொடிகள் எங்கும் பறந்து ஒளிவீச
எல்லோரும் ஒன்றாகி ஒருமனதால் கொண்டாடும்
இந்திய குடியரசு தினம் இது என அறிவோம்

எழுதியவர் : கே என் ராம் (25-Jan-21, 2:11 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : kudiyarasu thinam
பார்வை : 169

மேலே