கடமையில் தவறாதே

கடமையில் தவறாதே !
----------------------------------
ஆதிக்க சக்திக்கு அடிமையாகி
ஆற்றலை இழந்தத் தமிழ்மகனே
ஆற்றிடப் பணிகள் ஆயிரமிருக்க
ஆக்கமும் ஊக்கமும் பெற்றிடுக !
ஆறறிவைக் கொண்ட மானிடனே
ஆகமந்தம் அடையாது வெகுண்டெழு !

ஆள்வதும் அடக்குவதும் நமதுரிமை
ஆடுவோரின் ஆட்டத்தை நிறுத்திட
ஆணவத்தின் உச்சத்தை ஒடுக்கிட
ஆடுகளம் தயாராகுது உனக்காக !
சாதனைகள் பலபுரிந்திட புறப்படு
சாதிக்கப் பிறந்தவனே சாட்டையெடு !

போதிக்க நானொரு ஞானியல்ல
போதனை செய்பவன் நானல்ல !
வேதனை மேலிடவே கூறுகிறேன்
வேகமுடன் செயல்படு வெற்றிக்கு !
கடமையில் தவறாதே ஒருபோதும்
கனவுகள் மெய்ப்படப் பாடுபடு !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Jan-21, 9:28 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 563

மேலே