தழுவும்வரை தண்மைமிகு

மதந்தூக்கி மனமகிழும் மாநிலத்தீரே
மண்சார்ந்து உருவானதே மதமாகும்
பணஞ்சார்ந்து மதம்போனோர் ஆபத்தினராவர்
பலவகையில் துயர்த்தர துணிந்திடுவர்கள்
எழில்பேச்சு அவர்களிடம் நிறைந்திருக்கும்
ஏழுலகம் கண்டதாக நடிப்பிருக்கும்
எதனையும் இழிவாக்கும் திறனருக்கும்
எண்ணங்களில் அதிகமாக வன்மமிருக்கும்
தழுவும்வரை தண்மைமிகு செயலிருக்கும்
தகாததை எதிர்த்தாலோ தண்டனையிருக்கும்
பிடிபட்ட சிங்கம்போல மாற்றப்படுவாய்
பெண்சாதி பிள்ளைக்கொண்டு மிரட்டப்படுவாய்
உணவானது உருவாகும் நிலம்போலே
ஒவ்வொருவரும் உருவாகும் ஊரிலுள்ள
உன்னத பழக்கங்களே வழக்கமாகும்
சூடுவதும் அணிவதும் ஓதுவதும்
சூழ்ச்சமங்கள் நிறைந்ததாய் அர்த்தமிருக்கும்
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Jan-21, 11:19 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 71

மேலே