யாதாக இருந்தாலும்
அரசால் அறிவிக்கும் திட்டங்கள் யாவும்
புரியாத நிலையில் பயணிக்கும் போது
சிலரால் தொழிலாக கையாளப்படுது
புரிந்து தெளிகின்ற போதெல்லாம்
ஊழலால் கைக்கொள்ளப் படுகிறது
யாதாக இருந்தாலும் அந்தத்தில்
பாதிக்கப்படுவது என்னவோ குடிகளே
தோதாக திட்டங்களை அறிவித்து
சூதாக செயல்படுத்தும் அரசுகளே
மேலான நிலையில் மக்களை காக்குது
வீணான கனவுகளில் வாழ்ந்திடும்
கேடான மக்களின் மனம்மாறினாலே
வளமான வாழ்க்கைக் கிடைத்திடும்
------ நன்னாடன்.