அவள் நின்றிருந்தாள்

புத்தகக் கடையில் புத்தகத்தை ஒற்றொன்றாய்
புரட்டிப்பார்த்தேன்....

புத்தகம் ஒரு நாவல்
போரடிக்குமோ என்று ஐயம் எழுந்தது

புத்தகம் ஒரு கவிதை
நாமே எழுதிக்கொள்ளலாமே என்று தோன்றியது

புத்தகம் மருத்தவம்
படம் பயமுறுத்தியது நமக்கு சம்பந்தமற்றது

புத்தகம் தத்துவம்
யாருக்கு புரியும் யாருக்கு வேண்டும் !

புரட்டியது போதும் என்று நிமிர்ந்தேன்
அவள் நின்றிருந்தாள் புதிய புத்தகமாய்

புரிவதற்கு புன்னகை இதழ் இருக்கிறது அவளிடம்
புரிந்து கொள்ள காதல் மனம் இருக்கிறது என்னிடம் !

எழுதியவர் : (27-Jan-21, 11:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 164

மேலே