முகம்பொதித் தணைத்தால்

இணைக்குறள் ஆசிரியப்பா பாடல்
புள்ளுவம் செய்ய எண்ணியே நானுமே
பதியுடன் துனியிட்டு துனிந்தேன்
ஆய்யிழந்து சேக்கையில் ஆதுலனாய்
ஒல்லையாய் ஓதையிட்டு அழைப்பாய்
தலைவனை எலுவையே ஆணமாய்
நொவ்வலால் ஆஞ்சால் ஞஞ்ஞையில்
ஆராமத் காற்றும் வெம்மையாய்
கடும்பில் தாங்கிய மறுகுதொழில்
ஆவினத்து மோருமே அனலாய்
தொங்கும் பணிலம் பதிமார்பிலே
முகம்பொதித் தணைத்தால் பொசிந்திடும்
முதிதையால் வட்டிகையாய் உருவம் மாறுமே
----- நன்னாடன்.