சிறகை விரிக்கதடை

என் அங்கங்களில் ஏற்பட்ட மாற்றம்
தடுக்க முடியவில்லை.
அதனால் உண்டாகிய தடைகளை உடைக்க முடியவில்லை.
ஆணாய் பிறந்த என்னுள்
மங்கை அவள் ஆக்கிரமிக்க
மாற்றங்கள் மனதுக்குள் ...
என் தோழியிடம் கூறினேன்
தோழமை தடை.
தாயிடம் கூறினேன்
வீட்டினுள் தடை.
சேலை அணிந்து சாலையில் நடந்தேன் சமுதாயம் என்னை
சமமாய் பார்க்க தடை.
வேலைக்கு ஆட்கள் வேண்டும்
பலகை பார்த்து வேண்டி கேட்டேன்
வேலை கொடுக்க தடை.
அழகான இந்த உலகில் எங்களை
அன்பாய் பார்க்க தடை...
சமுதாய வாசலிலே
இச்சை சோற்றுக்கு
பிச்சை எடுக்கும் அவலநிலை.
தவறு செய்த கடவுள்
தண்டனையில் நாங்கள்...
எப்போது பறக்கும் எங்கள் சிறகுகள்
தடையில்லாமல் இந்த உலகில்....
அழுகுரலுடன் அரவாணியகிய நான்...

எழுதியவர் : ராஜா த (3-Feb-21, 8:40 am)
பார்வை : 109

மேலே