மனோ 02-பிப்-2021

என் இனிய மனோவிற்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

என்ன நினைக்கிறான்
என்பதில் புதிரானவன்...
என்ன சொல்கிறான்
என்பதில் விடையானவன்...

வகுத்துக் கொண்ட
வழிகளில் வலியவன்...
வாழ்க்கைப் பாதையில்
மிக எளியவன்...

கர்வம் தெரியாதவன்...
கௌரவம் குறையாதவன்...
எடை பார்க்கும் கருவியையும்
எதார்த்தத்தை சொல்வதிலும்
அதிர வைப்பவன்...

அவன்... நண்பர்களின்
மனதுக்கு இனியவன்...
மனோன்மணி ராஜன்
எனும் பெயருடையவன்...

பொறியாளன்... இவன்
மருத்துவத்தின்
கரம் பிடித்தவன்...
பிள்ளைச் செல்வங்களை
பொறியியல்... மருத்துவம்
படிக்க வைப்பவன்.. கல்வியின்
மகத்துவம் தெரிந்தவன்...

எண்ணிய எண்ணியாங்கு
எய்தத் தெரிந்தவன்...
இதனை இதனால் இவன்
முடிப்பானென அறிந்தவன்...

பலாச்சுளையில் தேன்
மனோவின் எண்ணங்கள்...
பூஞ்சோலையில் குளிர்தென்றல்
மனோவின் உரையாடல்கள்...

வசந்தங்கள் கொஞ்சும்...
வளங்கள் மிஞ்சும்
வார்த்தைகள் கெஞ்சும்...
வானமும் வசப்படும்...
மனோவிற்கு என்றென்றும்...

இனிய மனோன்மணி
என்றும் ராஜன் நீ...
உந்தன் பிறந்தநாளில்
இந்த சுந்தர ராஜனின்
வசந்த வாழ்த்துக்கள்...

வாழ்க பல்லாண்டு காலம்...
வளங்களின் வரங்களில்
எல்லாம் உனக்கு வசந்தகாலம்..
👍😃👏💐🙏🍫🌺🎂🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (3-Feb-21, 5:09 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 132

மேலே