குமார் 28-ஜன-2021

முருகனுக்கொரு நாள்
திருநாள்... அது இன்று
தைப்பூச நன்னாள்...
நண்பன் குமார் அவனுக்கு
இது இனிய பிறந்தநாள்...

இன்று ஜனவரி இருபத்தெட்டு...
குமாருக்கு வயது
என்றும் இனிய பதினெட்டு...

அன்பு நண்பன் குமார்...
உன்னை உருவாக்கியவர்களுடன்
நீயும் சேர்ந்து
உன்னை அழகாய்
மெருகேற்றிக் கொண்டாய்...

எல்லா தருணங்களிலும்
சிந்தை செயல் பேச்சில்
நீ உந்தன் சிறந்த வடிவம்...
நீ உந்தன் தேர்ந்த பதிப்பு
நீ உந்தன் தெளிந்த படைப்பு...

அதனால் உன்னைத் தெரிந்த
எல்லோர் மனங்களிலும் நீ
மிக உயர்வு... நல்ல உணர்வு...

இளைஞர்கள் உன்னிடம்
கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு..
முதியவர்கள் உன்னிடம்
பெற்றுக்கொள்ள செய்திகள் உண்டு
புதுப்பித்துக் கொள்வதில்
எப்போதும் புதுமையானவன் நீ...

அதுபோலவே என்றும் நீ...
வசந்தங்கள் கைபிடித்து
வானமும் வசமாக
ஆனந்தம் மகிழ்ச்சி வரமாக...

வளங்கள் எல்லாம் பெற்று
பல்லாண்டு வாழ்க...
பரவசமாய் வாழ்க...
பார்போற்ற வாழ்க...

அன்பு நண்பன் குமாருக்கு
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
👍😃👏💐🌺🍫🎂🙏🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (3-Feb-21, 5:04 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 99

மேலே