தேர்தல் கூட்டம்
கட்சி தலைவர்களின்
தேர்தல் பேச்சை
கேட்பதற்கு
கூடும் கூட்டத்தில் ...!!
கொரோனா
கட்டுப்பாடுகள்
காற்றினில் பறக்க ...!!
தேர்தல் பிரசாரம்
அனல் பறக்க ...
மனதிலே ஒரு கவலை ...!!
கொரோனாவின் பாதிப்பு
குறைந்து வரும் நேரத்தில் ...
மீண்டும் ...
கொரோனாவின் பாதிப்பு
எண்ணிக்கை அதிகரித்து
"கொரோனா" வார்டுகளே
ஒட்டு சாவடிகளாக
மாறிவிடுமோ என்ற
அச்சம் வருகிறது ...!!
மக்களே கவனமாக
இருங்கள் ...
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய முடியம்
என்பதை மறக்க வேண்டாம்..!!
--கோவை சுபா