பலகலை சசிகலா

தரவுகொச்சகக் கலிப்பா

எவ்வகையில் இணைந்தீரோ எதற்காக தங்கினீரோ
தோழியென்று உரிமைமிகு சொல்லினாலே நிழலாக
தொய்வின்றி பயணித்தே பெருவாழ்வு அவரென்ற
போதனையால் சிதையவைத்த அருநிழலே சரிதானோ

ஏக்கமாக இருந்தவரின் மனந்நுழைந்து இதமாக
எழிச்சியாக இனிதுச்சொல் பேசிமாற்றி ஆறுதலாய்
என்றுமேயும் ஏவலாளாய் கண்ணைப்போல் காவலாக
உலகிற்கு காட்டிமாற்றி மயக்கியது முறைதானோ

அரசுடைய சொத்தையுமே அதிகாரத் தனத்திலேயே
பொருந்தவிலைப் பேசியேயும் அடங்காமல் வாங்கிசேர்த்து
யாருடைய சொல்லையுமே கேட்காமல் பழக்கிவைத்து
அதலபாதம் அழைத்தமிழ்த்தி ஆற்றுபோக வைத்ததேனோ

மகத்துவமாய் துதித்தொழவே வேண்டியவோர் சாலமிகு
மனிதகுலத் திரவியமாய் நிலைத்தவாறு இருந்திருந்து
நெடும்புகழில் நிலைக்கொள்ளும் கோமளத்தாய் கெடுநட்பால்
சிறைச்சாலைச் சென்றுநொந்து கெடுப்பெயரை பெற்றதும்மால் .
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (10-Feb-21, 8:58 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 39

மேலே