மகிழ்

மெதுவாய் மின்னும் தங்க மீன்கள்
கடலின் சிறப்பு
சித்தரிக்கும் கற்பனை மனிதனின் சிறப்பு
பார்க்கும் பார்வையில் பல வேறுபாடுகள்
அவன் தேடும் ஒன்று, அவனின்
ஆசையோ,இன்பமோ,முன்னேற்றமோ
ஏதோ ஒன்று
மனிதனுக்கு கிடைக்க கிடைக்க தீரா
தாகம்
அடுத்து அடுத்து என மனம் குரங்காய் தாவி கொண்டு திருப்தி
அடையா நிலை
மனிதா
பார்வை குறிப்பிட்ட தூரம் தான் நிலை கொள்ளும்
ஆசை பேராசையாய் நிலை பெற்று
எல்லையில்லாத தூரம் வரை மனிதனை ஆட்கொள்ளும்..
வாழும் வாழ்க்கையே நிலை இல்லாத வாழ்க்கை
மனிதா சுகமாய், இன்பமாய் இருப்பதை வைத்து மகிழ்.....

எழுதியவர் : உமாமணி (10-Feb-21, 10:36 pm)
சேர்த்தது : உமா
Tanglish : magil
பார்வை : 275

மேலே