ஜென் மெனக்கிடும்போது
எனக்கிருக்கும்
வெட்கம் மானரோஷம் பற்றி
எனக்கே சந்தேகம்தான்.
விலைபோகா இப்பிணத்தை
விலைபெறா ஒன்றாக்கி
விலைபேசிக்கொண்டிருக்கும்
அற்பத்தனத்தில் நானில்லை
என்பதால் மட்டுமே...
நான்
விலகி இருக்க முடிகிறது
என்னிடமிருந்தும்
என்னை தன்போல் கொண்டாடும்
அவனிடமிருந்தும்....
இருப்பினும்,
உயிரோடு இருக்கும்வரை
என் பிணத்தை
நானே சுமக்கிறேன்
என்றளவில் கொஞ்சம்
அமைதியாக இருக்கிறது.