என்னவள்

புத்தம் புதிய கலைக் களஞ்சியம் அதைப்
புரட்டிப் பார்க்க புரட்டிப் பார்க்க
ஆய கலைகளின் விந்தைகள் கொஞ்சம்
கொஞ்சமாய்த் தெளிவதுபோல் பெண்ணே
உன்னுடன் பேசிப் பழகினேன் இந்நெருக்கம்
உன்னை எனக்கு தெளிவாக்கியதே என்னிதயத்தில்
உன்னை எனக்கு மட்டுமே என்று பூட்டிவைத்து
உன்னை என் காதல் தெய்வமாய்த் துதிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Sep-25, 3:49 pm)
Tanglish : ennaval
பார்வை : 82

மேலே