இருவிழிகள் காஷ்மீரத்து பனிநீரோடை
மாலையாக கழுத்தில் தொங்கும்
துப்பட்டாவின் அசைவில்
சோலைக் காற்று வீசுது
மௌனமாய் சிரிக்கும் புன்னகையில்
மாலை மஞ்சள் நிலா
நெஞ்சில் வந்து போகுது
மயக்கும் இருவிழிகளின் பனிப்பொழிவில்
காஷ்மீரத்து பனிநீரோடை உடைந்து
உள்ளே துள்ளி ஓடுது !