61 இலியிச்
லிப்னி நாம் இனி சென்று எது என்னவென பார்க்கலாம் என்று எழுந்து கொள்ள பின் தொடர்ந்தோம்.
அம்மக்கள் எங்களை கண்டும் கடந்து சென்றனரே தவிர யாரும் நின்று பேசவில்லை. அவர்களின் மொழியும் என்னவென்று தெரியவில்லை.
நேபில் மற்றும் கேமேற் என்னும் கம்போடிய மொழியும் கலந்த ஒரு கலவைதான் அவர்கள் பேசும் மொழி என்று லிப்னி சொன்னார்.
அவர்கள் தங்களுக்குள் முனகுவது போலவே பேசினார்கள். அதை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் சருகுகள் மீது நடக்கும் சரசர ஒலியை போலவே இருந்தது.
லிப்னி ஒருவரை அணுகி பேசினார். பின் எங்களிடம் நாம் ஒருவரை பார்க்க வேண்டும். எதிரில் தெரியும் பழைய கியூவில்கா மரங்களை தாண்டி சென்றதும் ஒரு குடிலில் அந்த நபர் இருக்கிறார் என்றார்.
அவர் பெயர் என்ன என்றாள் நளினி.
இங்கு யாருக்கும் பெயர்கள் இல்லை. இங்கு வணிகம் இல்லை. மொழியில் லிபி இல்லை. இவர்கள் இப்படியே இதுநாள் வரையிலும் வாழ்ந்து வருகின்றனர். மீன்கள் மற்றும் சிறு மிருகங்கள் தாவரங்கள் மட்டுமே உணவு. பறவைகளை கடவுளாக பார்க்கின்றனர். ஆனாலும் கூட இவர்களுக்கு கடவுள் என்றால் என்ன என்பதெல்லாம் தெரியாது என்று சொல்லி முடித்தார்.
இலியிச் தனக்குரிய இடத்தை சரியாக கண்டறிந்து இருக்கிறான் என்று நான் நளினியிடம் சொன்னேன்.
கியூவில்கா மரங்கள் அடர்ந்து இருந்தன. அவை வெயில் மீது நின்று கொண்டிருக்கும் ஒரு அசுரனை போல் இருந்தது. மரங்களுக்குள் நிறைய பறக்கும் புழுக்கள் இருக்கும். அவைகளால் மனிதனின் இருப்பை உணர முடியும் என்றாலும் ஆபத்து அற்றவை என்றார் லிப்னி.
குடில் தெரிந்தது.
நாங்கள் உள்ளே சென்று அவர் முன் அமர்ந்தோம்.
லிப்னி அவரிடம் முனகும் மொழியில் பேசினார். அதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்த அந்த முதியவர்
ஒரு தோலால் ஆன பையை எடுத்து முன்னே வைத்தார்...
லிப்னி அதை திறந்த போது மரப்பட்டையின் நெடி வந்தது. பெரிய பெரிய க்ளோடா இலைகள் கொண்டு மூடப்பட்டு இருந்த சில காகிதங்களை வெளியில் எடுத்தார்.
நளினி அதை வாங்கி புரட்டி புரட்டி பார்த்து இவை எல்லாமே இலியிச்சின் கை எழுத்துக்கள்தான் என்றாள்.
........வரும்........
======================