அஞ்சு குடுத்தத்தான் வருவேன்

வணக்கம்.வாங்க ஐயா..ரொம்ப நாளா உங்களுக்கு தூது அனுப்பினேன். இன்னிக்கு தான் வந்திருக்கிறீர். வருக, வருக. வளம் பெற்று வாழ்க..
@@@@@@@
வணக்கம் தலைவரே..நீஙங்க கடைசியாச் சொன்னீங்களே அதுக்காகத் தான் உங்க கட்சியில சேர வந்தேன். அரசல் புரசலா இதைப்பத்தி தகவல் தெரிஞ்சதும் எங்க கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்கிட்டு விலக்கிய பின் விளக்கம் கேக்கறாங்க. நான் தகுந்த விளக்கம் குடுத்தா மீண்டும் கட்சில சேத்துக்கறாங்களாம். நான் அந்தக் கட்சில மிகச்சிறந்த முன்னணிப் பேச்சாளராவும் செய்தி தொடர்பாளராகவும் இருந்தேன். எனக்குரிய.மரியாதை கிடைக்கலீங்க தலைவரே.
@@@@###@
நல்லதுங்க. நாங்க நல்லா கவனிப்போம். கவலையே வேண்டாம் கனவிலும். சரிய்யா. மூணு கோ..... தர்றோம். ஒரு தனி காரும் உங்களுக்கு.. டிரைவருக்கு சம்பளமும் தினப்படியும் கட்சியே தரும். சரி
மூணுக்கு என்ன சொல்லறீங்க?
#########
மூணு எல்லாம் சரிப்படாதுங்க.ஐயா.
##########
நீர் சிறந்த முன்னணிப் பேச்சாளர். சரி நாலு தர்றோம்.
#########
அஞ்சுக்கு குறைவா சரிப்படாதுங்க ஐயா.
#$########
சரி மின்னல் பேச்சாளர் மிமிக்கிரி மாமன்னர் மின்னல் மாறன் அஞ்சு நாளைக்கு. நானே ஒரு வசதியான புது பங்களா உமக்கு.. அதன் மதிப்பு அஞ்சே கால்.
#########
மிக்க நன்றிங்க ஐயா. நான் நாளை.வர்றங்க தலைவரே.

@@@@@@@
நல்லது மின்னல் மாறன்.

எழுதியவர் : மலர் (24-Feb-21, 10:24 pm)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 146

மேலே