The Crime-Final

“இத்தனூண்டு சிலைக்குள்ள என்ன வேலை பண்ணி வச்சிருக்கானுங்க பாருங்க பாஸ். எதிரிகள் நாம நினைக்கிறத விட மோசமானன்வங்களா இருப்பாங்க போல.” என்றான் கிருஷ்.”

“ஓகே.. ரூமை சார்ச் பண்ணுவோம்.” பீரோ மேஜை என எல்லா இடங்களிலும் சோதனை செய்த பிறகு ஒரு இரும்பு பெட்டி மட்டும் பாக்கி இருக்க, அந்த இரும்பு பெட்டி நம்பர் லாக்கால் லாக் செய்யப்பட்டிருந்தது.

“கிருஷ்.. அந்த டிவைஸ் எடுத்து நம்பர் லாக் பாஸ்வோர்ட் என்னன்னு கண்டுபிடி.” கிருஷ் தனது பையில் இருந்து மிகச்சிறிய கம்ப்யூட்டர் போல இருந்த ஒன்றை எடுத்து அதன் மீது பொருத்தி சார்ச் செய்யத் தொடங்கினான். அரைமணி நேர முயற்சிக்கு பிறகு,

“பாஸ்.. யுரேகா..” கிருஷ் பாவோர்ட்டை உள்ளிட்டு அந்த இரும்பு பெட்டியைத் திறந்தான்.

“உள்ள என்ன இருக்குன்னு பாரு.” கிருஷ் பெட்டியுனுள்ளே துளாவினான். கட்டுப் பணங்களும் சில காகிதங்களும் இருந்தன.

“பாஸ்.. இதைப் பாருங்க.” என்று காகிதங்களை நீட்டினான்.

“இது எல்லாமே உபேந்திரா கிட்ட இருந்து நான் கைப்பற்றின சீக்ரெட்கோட் வோர்ட்கள். இதை நம்ம நிபுணர்கள் கிட்ட கொடுத்து என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கணும். எல்லாத்தையும் போட்டோ எடுத்துக்கோ.” கிருஷ் எல்லா பக்கங்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டான். வேறு ஏதாவது இருக்கிறதா என தேடிப் பார்த்தப் பின் ஒன்றும் இல்லாததால் இருவரும் கிளம்பினர்.

மறுநாள் காலை..

“பாஸ், நாம அனுப்புன போட்டோல இருந்த வோர்ட்க்கு அர்த்தம் கண்டுபிடிச்சாச்சு..” ஜெ வாங்கிப்பார்த்தான்.

“நான் சந்தேகப்பட்டது சரியாகிடுச்சு..”

“என்ன கண்டுபிடிச்சிங்க?” என்றாள் வந்தனா.

“மக்கள் புரட்சி படை இயக்கம் இங்க எதோ மிகப்பெரிய சதிவேலை பண்ணப்போகுது. அந்த திட்டத்துக்கு பேரு “ஆபரேஷன் டைகர்.” உபேந்திராவும் குப்தாவும் பரிமாறிக்கொண்ட தகவல்படி அவங்க இங்க முக்கியமான சதிவேலை ஒன்னும் பண்ண ரெடி ஆகிட்டு இருக்காங்க. மிஸ் வந்தனா, நீ எங்களுக்கு உதவுற நேரம் வந்துருச்சு.”

“என்னோட அப்பாவ கண்டுபிடிக்க என்ன நான் வேணாலும் பண்ண தயார் ஜெ.”

“மக்கள் புரட்சிப் படை இயக்கம் செய்யப் போகுற சதிக்கு உங்க அப்பா எந்த விதத்திலும் உதவாம இருக்குறது முக்கியம் இல்லன்னா அவரும் இங்க ஒரு குற்றவாளி தான்.”

“எங்க அப்பா அந்த விதத்திலும் அதுக்கு உடந்தையா இருந்திருக்க மாட்டார் ஜெ, எனக்கு நம்பிக்கை இருக்கு.”

“நான் உபேந்திராக்கும் குப்தாவுக்கும் அவங்களோட சீக்ரெட்கோட் படி ஒரு லெட்டர் ரெடி பண்ணி அனுப்பப் போறேன். அது மூலமா உங்க அப்பாவ கண்டுபிடிச்சிடலாம்.”

உபேந்திராவின் பங்களா..

உபேந்திரா இருக்கையில் அமர்ந்து யோசனையோடு மது அருந்திக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்தார்கள் விநாயக்கும் கந்தசாமியும்..

“அந்த சிறுக்கி நிரஞ்சனாவ கண்டுபிடிச்சீங்களா.?”

“இல்ல.. அவளைத் தேடிப் போனோம் இந்த லெட்டர் தான் கிடைச்சது.”

“இப்படிக் கொடு..” வாங்கிப் பார்த்த உபேந்திரா,

“அவளோட புதுக் காதலன் அவளை ஹோட்டல் பார்க்குக்கு வரச் சொல்லிருக்கான். நானும் அங்கப் போறேன்.” அப்போது வாட்ச்மேன் வந்து தந்தியைக் கொடுத்து விட்டுப் போனான்.

“குப்தா கிட்ட இருந்து தந்தி வந்திருக்கு.” என்றபடி பிரித்துப் படிக்கத் துவங்கினான் உபேந்திரா.

ஜெவின் வீடு..

“எங்க அப்பாவ கண்டுபிடிச்சுடுவீங்களா ஜெ.?”

“கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம். நான் உபேந்திரா குப்தா ரெண்டு பேருக்கும் தந்திய அனுப்பிச்சுட்டேன். இந்நேரம் அவங்க அதைப் படிச்சிருப்பாங்க.”

உபேந்திராவின் பங்காளா..

“அய்யா தந்தில என்ன விஷயம் வந்திருக்கு. அதாவது பிரச்சனையா?” என்றான் விநாயக்.

“நம்மளோட சதி திட்டத்த சிலர் தடுக்கப் பாக்குறாங்களாம். அதை பத்தி பேசணும்ன்னு குப்தாகிட்ட இருந்து வந்திருக்கு. ஹோட்டல் கிரான்ட் சோழாக்கு வரச் சொல்றான். ரிசப்சன் வரை வந்திட்டு போங்க. நான் அங்க தான் உக்கார்ந்திருப்பேன். உங்களை தெரிஞ்சதா காட்டிக்க மாட்டேன். நீங்களும் தெரிஞ்சதா காட்டிக்க வேண்டாம்னு சொல்லிருக்கான்.”

“நீங்க போகனுமா.?”

“கண்டிப்பா நான் போகணும்,”

குப்தா கம்பெனி....

குப்தா அவசரமாய் வந்திருந்த அந்த சீக்ரெட் வோர்ட்களை மொழிபெயர்த்து வாசித்துக் கொண்டிருந்தான்.

“நம்மளோட சதி திட்டம் தகர்க்கப்படலாம். நான் ஹோட்டல் கிரான்ட் சோழா வருவேன். நீ அங்க என்ன தெரிஞ்சதா காட்டிக்க வேண்டாம். நான் ரிசப்ஷன் வரை வந்திட்டு போய்டுவேன். சிற்பி சுக்லாவோட மகள் அங்க வருவா நீ அவளைப் பாரு.. அடையாளத்துக்கு அவ என்னோட மோதிரம் ஒன்ன போட்டு வருவா.”

ஜெவின் வீடு..

“ஜெ நாம கிரான்ட் சோழா போனதும் என்ன பார்க்க குப்தாவுக்கு தந்தி அனுப்பிச்சுடீங்களா.?”

“அனுப்பிச்சுடேன். இந்தா இது உபேந்திராவோட மோதிரம் இத போட்டுக்கோ.”

“எனக்கு பயமா இருக்கு ஜெ.”

“பயப்படாதீங்க மிஸ் வந்தனா. எல்லாம் நல்லபடியா முடியும் உங்க அப்பாவையும் காப்பாத்திடலாம்.”

ஹோட்டல் கிரான்ட் சோழா...

குப்தா வரவேற்ப்பு அறையில் உட்கார்ந்திருந்து பேப்பர் படிப்பது போல பாவ்லா காட்டிக் கொண்டிருக்க, உபேந்திரா அங்கு நுழைந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் தெரிந்தது போல காட்டிக் கொள்ளாத உபேந்திரா ரிப்சன் அறைக்கு போய் பேசி விட்டு திரும்பி நடந்தான்.

“வந்தனா அதோ உபேந்திரா திரும்பி போறான். இப்போ நீ உள்ள போ. ரூம் புக் பண்ணு, பண்ணிட்டு ரூமுக்கு போ, நான் கூடவே வர்றேன்.” வந்தனா உள்ளே போய் ரிசப்சன் ஹால் சென்று புக் செய்து விட்டு சாவி வாங்கிக் கொண்டு செல்ல, குப்தா அவளையும் கையில் இருந்த மோதிரத்தையும் கவனித்து விட்டு அவளை செல்லில் புகைப்படம் எடுத்துக் கொண்டதை ஜெ மறைந்திருந்து கவனித்தான். பின்பு குப்தா அவசரமாக அந்த இடத்தை விட்டு கிளம்பி காரைக் கிளப்பிக் கொண்டு செல்வதைக் கவனித்து விட்டு வந்தனா இருந்த அறைக்கு சென்றான்.

குப்தா கம்பெனி...


காரை விட்டு இறங்கிய குப்தா தனது அலுவலகத்தில் நுழைந்தான். ஒரு குறிப்பிட்ட அறைக்கு சென்று கதவைச் சாத்திக் கொண்டு ஒரு பொத்தானை அழுத்த, தரை அப்படியே இரண்டாக பிளந்து நிலவறைக்கு வழி விட்டது. படிகளின் வழியே உள்ளே நுழைந்தான் குப்தா. உள்ளே விசாலமான ஒரு அறை இருந்தது. ஒரு ஓரத்தில் சுக்லா சிற்ப்பங்களை செதுக்கிக் கொண்டிருக்க,

“ஹலோ.. சுக்லா.” சுக்லா திரும்பினார். குப்தா நின்று கொண்டிருந்தான்.

“வா குப்தா. என்ன விஷயம்? ஏதாவது பிரச்சனையா.?” என்ற சுக்லாவிடம் செல்போனில் இருந்த வந்தனாவின் புகைப்படத்தைக் காட்டினான்.

“இதுல இருக்குறது யார்னு தெரியுதா.?”

“மை டாட்டர் வந்தனா. பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. என்றபடியே உற்றுப் பார்த்து கண்கலங்கினார்.”

“இவ உன் மகளான்னு தெரிஞ்சிக்கத்தான் போட்டோ பிடிச்சிட்டு வந்தேன். உபேந்திரா உன்னோட டாட்டர மீட் பண்ண சொல்லிருக்கான்.”

“என்னோட டாட்டர் இங்கதான் இருக்காளா.?”

“ஆமாம்.. சாந்திரம் அவள இங்க கூட்டி வர்றேன்.”

“ஹோட்டல் கிரான்ட் சோழா, இரவு நேரம்..

வந்தனாவும் ஜெவும் இருந்த அறையில் இண்டர்காம் தொலைப்பேசி அலறியது.

“அது குப்தாவாதான் இருக்கணும். எடுத்து பேசு.” என்றான் ஜெ, பேசிய வந்தனா,

“அது குப்தா தான், ரிசிப்சன் ஹால்ல இருக்கான்.”

“அவன் கூட போ வந்தனா, நான் உங்க கார பாலோ பண்ணுவேன்.” வந்தனா கீழே ஹாலுக்கு போய் சுற்றுமுற்றும் பார்க்க..

“ஹலோ மிஸ் வந்தனா.. நான் குப்தா. உங்க அப்பாக்கு வேண்டியவன்.”

“நான் எங்க அப்பாவ பாக்கணும்.”

“கண்டிப்பா பார்க்கலாம் என் கூட வாங்க.” இருவரும் காரை நோக்கி நடந்தனர்.

“என்னோட அப்பாவ எப்ப பார்க்கலாம்.?”

“கொஞ்சம் பொறுமையா வாங்க வந்தனா. நாம எச்சரிக்கையா இருக்க வேண்டியதா இருக்கு.” இருவரும் காரில் ஏறி குப்தா கம்பெனி நோக்கிச் செல்லத் துவங்க அவர்கள் சென்ற காரைப் பின் தொடர்ந்தான் ஜெ.

சிறிது நேரம் கழித்து, குப்தா கம்பெனி..

“மிஸ் வந்தனா நாம உங்க அப்பா இருக்குற இடத்துக்கு வந்துட்டோம்.” கார் காம்பௌன்ட் உள்ளே நுழைந்தது. ஜெ காரை நிறுத்தி விட்டு காம்பௌன்ட் சுவரேறிக் குத்தித்து செடி மறைவில் பதுங்கிக் கொண்டான்.

அப்போது வவ்..வவ்.. என நாய் ஆக்ரோசமாக குறைக்கும் சத்தம் கேட்டது.

“வாட்ச்மேன் நாய பிடிச்சிக்கோ. இல்லன்னா வந்தனா மேல பாய்ஞ்சிடப் போகுது.” வந்தனா நாயைக் கண்டு மிகப் பயந்தாள். அவள் பயப்படுவதைக் கண்ட குப்தா.

“ஒன்னும் இல்ல வந்தனா நேத்து நைட் சிலபேர் நம்ம ஆபீஸ்குள்ள வந்திருக்காங்க. அதான் வாட்ச்மேன் பாதுகாப்பபா இருக்கட்டுமேன்னு நாயைக் கூடி வந்து வச்சிருக்கான்.” வாட்ச் மேன் நாயைப் பிடித்துக் கொள்ள இருவரும் கட்டிடத்தினுள்ளே நுழைந்தார்கள். குப்தா ரகசிய அறையை திறந்த அதே நேரம்..

“வவ்..வவ்..” நாய் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி ஆக்ரோசமாக குலைத்தது. வாட்ச் மேன் கைகளில் இருந்து திமிறியது.

“என்ன ரொம்ப துள்ளுற.? சரி ஓடு.” என்றபடியே நாயை வாட்ச்மேன் அவிழ்த்து விட்டான். பின்னாடியே அவனும் சென்றான். ஜெ இருந்த திசையில் வேகமாக சென்ற நாய் ஜெவின் காலணியைக் கவ்விக்கொண்டு வர,
“ இதென்ன? இது யாரோடது?” என வாட்ச்மேன் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் மற்றொரு புறத்தில் இருந்து ஜெ, வாட்ச்மேனின் தொப்பியை நோக்கிக் சுட்டான். தொப்பி பறந்து போய் விழுந்தது. திகைத்த வாட்ச்மேன் அதிர்ச்சியோடு திரும்ப,

“நாய பிடிச்சிக்கோ, இல்லன்னா அடுத்தக் குண்டு உன் தலைக்குதான்.” ஆனால் வாட்ச்மேன் அதை அலட்சியம் செய்து, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து ஜெவை நோக்கி சுட முயற்சி செய்ய.. “படீர்ரென” ஜெவின் துப்பாக்கிக் குண்டு வாட்ச்மேனின் நெஞ்சைச் சுட்டது. வாட்ச்மேன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தான். நாய் ஜெவை நோக்கிப் பாய்ந்தது. ஜெ துப்பாக்கியால் நாயின் தலையை அடித்தான். நாய் ஒரு ஓரத்தில் முனகிக் கொண்டு விழுந்தது.

அதே நேரத்தில் ரகசிய நிலவறையத் திறத்த குப்தாவிற்கு துப்பாக்கிச் சத்தம் கேட்க..

“வெளியே துப்பாக்கிச் சத்தம் கேக்குது.”

“நீ இங்கயே இரு.” என்றபடி குப்தா தனது துப்பாக்கியை உருவிக் கொண்டு வெளியே பாய்ந்தான். குப்தா ஓடி வருவதைக் கண்ட ஜெ. செடி மறைவில் பதுங்கிக் கொண்டான். ஒடி வந்த குப்தா வாட்ச்மேனும் நாயும் சுருண்டு விழுந்து கிடப்பதைக் கண்டான். குப்தாவின் பின்புறத்தில் மெதுமாக நெருங்கிய ஜெ, துப்பாக்கியின் பின்புறத்தால் குப்தாவின் மண்டையில் ஓங்கி அடிக்க, குப்தா மடங்கி விழுந்து மயங்கினான். ஜெ கட்டிட்டத்துனுள் நுழைந்தான். வந்தனா பயந்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“என்னாச்சு ஜெ.?”

“கொஞ்சம் டிஷ்யூம்.. டிஷ்யூம்.. வா உங்க அப்பாவ பார்க்கலாம்.” என்றபடியே வந்தனாவைக் கூட்டிக் கொண்டு நிலவறையில் நுழைந்தான். உள்ளே தனது தந்தையைக் கண்ட வந்தனா ஓடிச் சென்றுக் கட்டிக் கொண்டாள். சுக்லாவும் கண்ணீர் சிந்த..

“வந்தனா அன்ட் சுக்லா உங்க பாசப் போராட்டத்த கொஞ்சம் நிறுத்துரிங்களா.? சுக்லா நான் உங்க கிட்ட சில கேள்வி கேக்கணும்.”

“யார் இது.?” என்றார் சுக்லா.

“இவர் மிஸ்டர் ஜெ, சிபிஐ அதிகாரி. உங்களை கண்டுபிடிக்க இவர்தான் உதவி பண்ணாரு.”

“மிஸ்டர் சுக்லா. “ஆபரேசன் டைகர்” சதிவேலை திட்டத்துக்கு நீங்க உடந்தையா இருந்திருக்கீங்க. அது என்ன திட்டம்.?”

“ஆபரேசன் டைகர்” சதிவேலை திட்டமா.? நீங்க பொய் சொல்றீங்க ஆபரேசன் டைகர் அப்படிங்குறது நான் வடிவமைச்ச சிலை.”

“சிலையா.?”

“ஆமாம். சென்னைல நடக்குற இந்திய தொல்ப்பொருள் கண்காட்சிக்காக நான் வடிவமைச்ச ஸ்பெசல் சிலை அது.”

“தொல்ப்பொருள் கண்காட்சியா? அது நமது இந்திய பிரதமர் கலந்து கொள்கிற நிகழ்சியாச்சே.”
“அது பிரதமர் கலந்துக்குற நிகழ்ச்சின்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும்.”

“பிரதமர் கலந்துக்குற அந்த நிகழ்ச்சிக்கும் இந்த “ஆபரேசன் டைகர்” திட்டத்துக்கும் என்ன தொடர்பு இருக்கும்.? அந்த சிலை இப்போ எங்க இருக்கு.?”

“இந்த கம்பெனியோட கிளைக் கம்பெனி இன்னொன்னு பக்கத்துல இருக்கு அங்க தான் இருக்கும்.”

“வாங்க போகலாம்.” எல்லோரும் கிளம்பி காரில் ஏறினர். அவர்கள் காரில் ஏறிச்சென்ற அதே நேரம் குப்தா கண் விழித்தான். எல்லோரும் காரில் ஏறிச் செல்வதைப் பார்த்தவன்.

“இந்நேரம் அவங்களுக்கு நம்ம திட்டம் தெரிஞ்சிருக்கும். உபேந்திராகிட்ட கலந்துக்காம இத வந்தனாவ இங்க கூட்டி வந்தது தான் தப்பாகிடுச்சு, இத உடனே உபேந்திராவுக்கு சொல்லியாகனும்.” என்றபடியே செல்போனில் உபேந்திராவைத் தொடர்பு கொண்டான்.

“ஹலோ உபேந்திரா, நான் குப்தா பேசுறேன்.”

“நம்ம இயக்கத்தோட விதிப்படி நாம போன்ல பேசக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா குப்தா.?”

“நோ.. இங்க சில விசயங்கள் நடந்துடுச்சு.”

“என்ன விஷயம்.?”

“நீ தந்தில சொன்ன மாதிரியே சுக்லாவோட டாட்டர சந்திச்சு கூட்டி வந்தேன். ஆனா இன்னொருத்தன் வந்து என்ன அடிச்சு போட்டு சுக்லாவ கூட்டிட்டு போய்ட்டான்.”

“என்ன சுக்லா டாட்டரா.? டேய் முட்டாள்.. அப்படி யாரையும் நான் உன்ன சந்திக்கச்சொல்லி உனக்கு தந்தி அனுப்பவே இல்லையே..”

“மை காட்.. அப்போ நம்ம சீக்ரெட்கோட்வோர்ட்ல வந்த தந்தி போலியா.?”

“குப்தா நாம செம்மையா ஏமாந்திருகோம். “ஆபரேசன் டைகர்” சிலை கண்காட்சிக்கு போயிடுச்சா இல்ல இன்னும் கம்பெனில தான் இருக்கா.?”

“இன்னும் கம்பெனில தான் இருக்கு.”

“நீ சீக்கிரமா அங்க போ. நானும் அங்க வர்றேன்.” குப்தா நிறுத்திருந்த தான் காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தான்.

அதே நேரம் ஜெ வந்தனா சுக்லா மூவரும் சிலை பேக் செய்யப்பட்டிருந்த கம்பெனியை அடைந்தார்கள். ஜெ பூட்டிருந்த கம்பெனியின் பூட்டை தனது துப்பாக்கியால் சுட பூட்டு தெறித்து விழுந்தது. ஷெட்டரை திறந்து கொண்டு மூவரும் உள்ளே நுழைந்தார்கள். அங்க பல சிலைகள் பேக் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் பிரித்துப் பார்த்தார்கள். சில நிமிட தேடலுக்குப் பிறகு..

“ஜெ அந்த சிலை இங்க இருக்கு..” சுக்லா பிரிக்கப்பட்ட பகுதியைச் சுட்டிக் காட்டினார். மூவரும் சிலையை ஆராய்ந்தார்கள்.

“சிலை நல்லாதானே இருக்கு.? உடைச்ச மாதிரி தெரியலையே.” என்றாள் வந்தனா.

“சுக்லா நீங்க பாருங்க” சுக்லாவும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார்.

“அப்பா சொல்றது உண்மை ஜெ. நாம தான் தப்பான இடத்துல சோதனை பண்றோமோ.?”

“இல்ல வந்தனா இந்த சிலை பேரு ஆபரேசன் டைகர். உபேந்திரா அன்ட் குப்தா கோ பண்ணுற சதிவேலைக்கும் பேரு ஆபரேசன் டைகர் தான். so, ரெண்டும் ஒன்னுக்குள்ள ஒன்னு தொடர்புடையாதா இருக்குக்கணும். முன்னாடி ஏதோ போதை மருந்து கடத்தல் விசயம்ன்னு நெனைச்சிட்டு இருந்தேன். ஆனா இந்த சிலை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுப்பப் போறாங்கன்னதும் கொஞ்சம் இடிக்கிது. so, நாம சிலைய இன்னும் த்ரோவா செக் பண்ணனும்.” என்றபடியே சிலையைக் கவிழ்த்தான் ஜெ.

சிலையின் கீழ்புறப் பகுதியை உற்றுப் பார்க்க பார்த்த உடனே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சதுரமாய் சிலை வெட்டி எடுக்கப் பட்டிருந்தது.

“இங்கப் பாருங்க. சிலையா வெட்டி எடுத்து திருப்பி பொருத்திருக்காங்க.” எல்லோரும் அதைப் பார்த்தனர்.

“ஆமா ஜெ.” வந்தனா கூவினாள். ஜெ வெட்டி எடுத்தப் பகுதியை திறக்க முயன்றான். சில நிமிட முயற்சிக்கு பிறகு அது கையோடு வந்தது உள்ளே வெடிகுண்டு.!

“மைகாட்..”

“என்னாச்சு ஜெ.”

உள்ள வெடிகுண்டு வச்சிருக்காங்க. பிரதமர் இந்த சிலையை பார்வையிட வரும் போது வெடிக்க வச்சி பிரதமரை கொலை செய்ய நெனைச்சிருக்காங்க.”

“அப்படின்னா இதுதான் ஆபரேசன் டைகர் திட்டமா?”

“ஆமா வந்தனா.” அப்போது..

“பரவாயில்லை எங்க திட்டத்த கண்டுபிடிச்சுட்டீயே.” உபேந்திரா துப்பாக்கியுடன் சிரித்துக் கொண்டு நின்றான். ஜெ துப்பாக்கியை உருவி உபேந்திராவைக் குறி வைத்தான்.

“நீ தப்ப முடியாது உபேந்திரா.”

“நீ முத உயிரோட இருந்தா தான. ஹலோ வந்தனா கண்ணு அவன் கைல இருக்குற துப்பாக்கிய வாங்கி இப்படிப் போடுறீயா. இல்ல உங்க அப்பாவ சுடவா.?” அதே நேரத்தில் குப்தா சுக்லாவை பின்புறமாக வந்து அணைத்து துப்பாக்கியை தலையில் வைத்தான். எல்லோரும் அதைப் பார்த்ததால் கவனம் அங்கே திரும்பிருக்க, அந்த நொடி ஜெவுக்கு போதுமானதாக இருந்தது. ஜெ படீரென டியுப்லைட்டைச் சுட சுற்றிலும் இருளானது. ஜெ சரேலென விலகினான். உபேந்திரா ஜெ நின்றப் பகுதியைச் சுட்டான். ஜெ விலகிருந்ததால் அவை பயனற்றுப் போகின.

“நீ தப்பிக்க முடியாதுடா. மரியாதையா வந்திரு.” உபேந்திரா கத்தினான். பதிலில்லை.

“ஜெ எங்கிருந்தாலும் வந்திரு, நீ எங்க கூட ஒத்துழைச்சா உனக்கு கோடிக் கணக்கா பணம் தர்றோம்.”

“நிஜமாவா.”

“உண்மையாதான்.”

“உன்ன எப்படி நம்புறது உபேந்திரா.?”

“நீ நம்பிதான் ஆகணும்.”

“சரி. உன்ன நம்பனும்ன்னா உன்கிட்ட இருக்குற துப்பாக்கிய தூரப் போடு.”

“சரி நான் போட்டுடுறேன்.” என்றபடி துப்பாக்கியை உபேந்திரா எறிந்தான். ஜெ இருட்டிளிருந்து வெளியே வந்தான். உபேந்திராவை நெருங்கினான்.

“நீ ஒரு தப்பு பண்ணிட்ட ஜெ, ஹா.. ஹா.. ஹா.. என் கிட்ட இன்னொரு துப்பாக்கி இருக்கு.’ என்றபடி ஜெவை குறிப் பார்த்தான்.

ஜெ சரேலென விலகி உபேந்திராவின் கையில் இருந்த துப்பாக்கியை தட்டி விட்டான். துப்பாக்கி மூலையில் போய் விழ, ஜெ பல்டி அடித்து துப்பாக்கியைக் கைப்பற்றினான்.

“டேய்..”எனக் கத்திக் கொண்டு ஜெவை நோக்கி ஓடி வர..

“டுமீல்.. டுமீல்.. ஜெ கையில் இருந்த துப்பாக்கி குண்டைக் கக்கியது. உபேந்திரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்து இறந்தான்.

“ஹா..ஹா.. உங்க ஆளு செத்தான். குப்தா கொக்கரித்தான்.

“வாய்ப்பில்லை ராஜா.. என்றபடியே ஜெ குப்தாவை நோக்கி வந்தான்.. அதே நேரம் காவல்துறை அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தது.

மறுநாள்...

சிலையில் இருந்த வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. குப்தா விநாயக் கந்தசாமி எல்லோரும் கைது செய்யப்பட்டு காவலில் கொண்டு செல்லப்பட..

ஆபரேசன் டைகர் சதிதிட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.


-சுபம்-


(மிஸ்டர் ஜெவின் சாகசங்கள் தொடரும்)

எழுதியவர் : அருள் ஜெ (24-Feb-21, 7:49 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 147

மேலே