தங்கத் தட்டில்
தீர்க்கதரிசிகளாய் இந்தியாவின் ஆட்சியாளர்கள்
தினமும் இயந்திர எரிபொருள் விலையை ஏற்றி
வாரத்திற்கொரு முறை எரிவாயுக்கு விலை உயர்த்தி
சுங்கச்சாவடியில் வரிக்காக மொத்த தொகையையும்
செலுத்தக்கோரி விரைவு பயண அட்டை வழங்கியும்
விவசாயிக்கு வங்கியில் மூவாயிரம் செலுத்திவிட்டு
அவர்களிடமிருந்தே முப்பதாயிரம் வசூல் செய்யவே
பல் வேறான வகையில் விலை உயர்வும் வழங்கியும்
எந்த நியாயமான போரட்டத்தையும் தீர்க்காமலும்
எல்லா நிகழ்விற்கும் தேச பக்தி வர்ணம் பூசியும்
ஏதோ ஒரு அகந்தையில் உள்ளது போல்
எல்லா அறிவில்லா வாக்களிக்கும் மக்களும்
எண்ணும் வகையில் தெரிந்தாலும் - திறமையான
தாமரை சின்னம் தாங்கிய ஆளுங்கட்சியால் - இனி
யாவரும் தங்கத் தட்டில் அருஞ்சுவையான உணவிட்டு வெள்ளிக்கரண்டியால் எடுத்து உண்ணும் நிலை
வரவுள்ளது வெறுமையாக வயிற்றை வைப்போம்.
----- நன்னாடன்.