இப்போது நான் அறைக்குள் இருக்கிறேன்

இப்பொழுதாவது
எழுதிவிடலாம் அக்கவிதையை
என்றெண்ணும் கணத்தில்தான்
மரணம் வந்து நிற்கிறது.

நள்ளிரவு.
பேரமைதி.
சில நிமிட காற்று.
ஓரளவு பனி.

மரணத்தின் இயல்புகளானது
நொடிகளை நம்பி
யாருக்கும் எதற்கும்
காத்திருத்தல் இல்லை
என்பதை நான் அறிவேன்.

ஒரு பாதசாரி
ஒரு இருமல் ஒலி
ஒரு வாகன இரைச்சல்
ஒரு குரைப்பொலி.

என் கவிதையினுடைய
எல்லா சொற்களும்
எல்லா சிந்தனைகளும்
விலகிக்கொண்டிருக்கும்
உயிரில் சிக்கி இருக்கிறது.
உயிரோ தன்வயமுற்று
கவிதையின் கால்பற்றி
இழுத்து விளையாடுகிறது.

திகைப்பு.
பெருமூச்சு.
அழுத்தம்.
கவனம்.

மரணம் தலைகுனிந்து
தன் வழியே செல்கிறது.
அந்த கவிதையை
நான் எழுதலானேன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Feb-21, 1:11 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 78

மேலே