ஐஞ்சொற்பா - 3

பயிர் செய்ய
வேண்டுமே நல்பருவம் அதுபோல்
கற்கவும் வேண்டுமே

கல்விப் போதிப்போர்
உலகிற்கு சக்கரமாம் இயங்க
வேண்டாம் தீயவைபுகட்டல்

தேர்வால் தேர்வோம்
கூரிய அறிவோரின் துறையை
பிரகாசிக்க நல்வழி

யாவற்றையும் கற்போம்
தம்முள் விரும்பியதில் நிலைத்து
வழிகாட்டுவோம் உலகிற்கு.

எல்லையில்லை கல்விக்கு
இலக்கு வைத்து கற்பதே
போற்றுதல் தரும்.

படிக்க வேண்டும்
சிறந்த ஞானம் ஞாபகம்
அனைத்திலும் சிறக்க .

கற்றதன் வழியில்
செல்லுவோர் வாழ்க்கை எந்நிலையிலும்
கீழ்நிலை அடையாது.

தெளிவாய் கற்றோர்
அடைவர் நெய்யின் நிலையை
கெடுவதில்லை என்றுமே.

அனுபவத்துடன் கல்வியே
ஆதவனாய் ஆற்றல் பொருந்தியது
அணுவணுவாய் ஏற்றந்தரும்

கற்கவில்லை என்றே
தாழ் மனங்கொள்ளல் கூடாது
வசப்படுத்தலாம் கல்வியை.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Feb-21, 9:30 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 45

மேலே