நகைச்சுவை துணுக்குகள் 36
ஒருவன் நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு குரல்
“ நில்.இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், உன்தலையில் செங்கல் வந்து விழும் என்று . அதைக்கேட்டவுடன் திகைத்து நின்றான்.
அடுத்த வினாடி அவன் முன்னால் ஒரு பெரிய செங்கல் ஒன்று விழுந்தது. அவன் மயிரிழையில் தப்பினான்.
மறுபடியும் தன் நடையைத்தொடர்ந்தான். கொஞ்ச தூரம் நடந்த பின் ரோட்டைக் கடக்க நினைத்தான். மறுபடியும் அதே குரல்
“ நில் ரோட்டைக் கடக்காதே. மீறி கடந்தால் உன் மீது வண்டி ஏறிவிடும். ஜாக்கிரதை” என்றது.
அடுத்த வினாடி அங்கு ஒரு கார் கண்மண்தெரியாத வேகத்தில் போய்க்கொண்டு இருந்தது. தப்பினதே ஒரு பெரிய அதிருஷ்டம் என்று நினைத்தான்.
“அது சரி. என்னை இரு முறை காப்பாத்தினாயே , நீ யார்? என்று கேட்டான்.
அப்போது அந்தக்குரல் சொன்னது” “நான் உன்னைக் காக்க வந்த தேவதை” என்று.
அவன் அந்த தேவதையை “ எனக்குக்கல்யாணம் ஆனபோது நீ எங்கே போய்தொலைத்தாய்? தூங்கிக்கொண்டு இருந்தாயா? என்று மிகுந்த கோபத்துடன் கேட்டான்.
*****************
*அசட்டுப் பிச்சு: என் கொள்ளுத்தாத்தா இப்ப உயிரோட இருந்திருந்தா ரொம்பவும் ஃபேமஸ் ஆயிருப்பார்.
*ராமு: அப்படி ஃபேமஸ் ஆகும்படி உன் கொள்ளுத்தாத்தா என்னடா செஞ்சார்?
அ. பிச்சு: ஒண்ணும் செய்யல்லே. ஆனா அவர் இப்ப உயிரோட இருந்திருந்தா அவர் வயசு 175 ஆயிருக்கும். உலகத்துலேயே வயசானவர் அவர்தான்னு ஃபேமஸ் ஆகி கின்னஸ் புக்குலே அவர் பேர் வந்திருக்கும், இல்லியா?
***************
*அப்பா: சென்னைக்கும் மும்பாயிக்கும் இந்த பட்ஜெட்டுலே ஒரு புது ரயில் விடுவாங்கன்னு எதிர் பார்த்தேன். ஆனா விடல்லே
அசட்டுப் பிச்சு: தண்டவாளத்துலே விடாம ரயிலை பட்ஜெட்டுலே விட்டு என்னப்பா பிரயோசனம்.?
************
*அம்மா: டேய்பிச்சு, உன் கிட்டே கொடுத்த ஷாப்பிங் லிஸ்டுலே கெச்அப் போட மறந்துட்டேன். நம்ம வீட்டுலே கொஞ்சம்தான் இருக்கு. அதனாலே அதையும் லிஸ்டுலே போட்டுக்கோ..
சொன்னபடி செய்தான் அசட்டுப்பிச்சு.
அ. பிச்சு: அம்மா லிஸ்டுலே கெச் அப்பையும் போட்டுக கோன்னு சொன்னயேன்னு நானும் நம்ம வூட்டுலே பாக்கி இருந்த கெச்சப்பை போட்டுக்கிட்டேன். .இப்ப லிஸ்டிலே என்ன எழுதி இருக்குன்னே தெரியலே
அம்மா: ஓங்கிட்டே போய்சொன்னேன் பாரு