நகைச்சுவே துணுக்குகள் 35

அப்பா நான் ஒரு பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். உங்க சம்மதம்தேவை
சாரி சொல்லு
எதுக்கப்பா? நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல்லைய உங்களுக்கு.
சாரி சொல்லு.
எதுக்காக என்னை சாரி சொல்லச்சொல்றீங்க?
அதை யெல்லாம் கேக்காதே. முதல்லே சாரி சொல்லு.
எதுக்காக என்னை சாரி சொல்லச்சொல்றீங்க? நான்கேட்டதுலே என்ன தப்பு?
நீ கல்யாணம் பண்ணிக்கணும்னா, முதல்லே சாரி சொல்லு.
என்ன அப்பா, திரும்பத்திரும்ப சாரி சொல்லச்சொல்றீங்க?
எதுவும் கேக்காம சாரி சொல்லு.
சரி. சாரி அப்பா
எப்ப நீ எந்தக் காரணமும் தெரியாம சாரி கேட்டியோ, அப்பவே நீ கல்யாணம் பண்ணிக்கத்தயார் ஆயிட்டே. இனி நீ கல்யாணம் பண்ணிக்கலாம்.
************
ஒரு பஸ் நிறைய பெண்கள் பிக்னிக் சென்ற போது அந்தப் பஸ் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டனர். அதனால் பாதிக்கப்பட்ட பல கணவன்மாரகளும் ஒரு வாரம் விடாமல் அழுது தீர்த்தனர்.
ஆனால் சோமு மட்டும் ஒருவாரத்தோடு அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழுது கொண்டு இருந்தார்.
அவர் நண்பர் அவரைப்பார்த்து “நீங்கள் ஏன் விடாமல் அழுகிறீர்கள்?. உங்கள் மனைவிதான் அந்த விபத்துக்குள்ளான பஸ்ஸில் போகவில்லையே” என்று கேட்டதற்கு அவர்
“ அதனால்தான் அழுகிறேன்” என்றார் மிகுந்த சோகத்துடன்.
***************
ஒரு கூட்டம் நிறைந்த மாலில் அழகான பெண் ஒருத்தியின் அருகில் சென்று அவன் அவளிடம் என்னுடன் நீங்கள் கொஞ்ச நேரம் பேசமுடியுமா என்று கேட்கிறான்.
நீங்க யாருன்னே தெரியாது. உங்க கிட்டே நான் ஏன் பேச வேண்டும்? என்று கோபமாகக்கேட்டாள் அவள்.
ஒன்றுமில்லை. இங்கேதான் எங்கேயோ என்னுடன் வந்த என் மனைவி காணாமற்போய்விட்டாள். எந்த அழகான பெண்ணுடன் நான் பேச ஆரம்பித்தாலும் அடுத்த நிமிஷத்தில் என் மனைவி அதை எப்படியோ மோப்பம் பிடித்து எங்கிருந்தாலும் வந்து விடுவாள். அதனால்தான் கேட்டேன். நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது. அவளை இந்தக்கூட்டத்தில் கண்டு பிடிக்க வேறே வழி தெரியவில்லை.
**********
டாக்டர்: உங்க வியாதிக்குக் காரணமே தெரியல்லியே. ஒருவேளை குடிச்சதனாலே இருக்குமோ?
நோயாளி: அப்படின்னா உங்க குடி மயக்கம் தெளிஞ்ச பிறகு நான் வரேன்
டாக்டர்.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (26-Feb-21, 6:50 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே