நம் நட்பு

கலப்படமில்லா அன்பை தருகிறது உன் நட்பு!

சிறுதுளி கண்ணீருக்கு இடமில்லாமல்

சிரிக்க மட்டுமே கற்றுக்கொடுத்தது உன் நட்பு!

தவறு செய்யும் போது

தலையில் கொட்டியும்

தவறி விழும் போது

தட்டி எழுப்பவும் துணை நின்றது உன் நட்பு!

புதையல் தேடி அலையும் பலருக்கு

புதிர் இல்லப் புதையல் உன் நட்பு!

நான் படித்த புத்தகத்தில்

பிடித்த புத்தகம்... உன் மனது!

பிரிந்து சென்றாலும் அழியாத

சுவடாய் நினைவுகளை சுமக்கும் நம் நட்பு!

எழுதியவர் : கீர்த்தனா (3-Mar-21, 8:44 pm)
சேர்த்தது : Keerthu
Tanglish : nam natpu
பார்வை : 641

மேலே