புவி
நான் மட்டும் இல்லாது
எல்லோரும்
இவ்வெளி
பகைமை மட்டும் இல்லாது
தோழமையும்
இவ்வெளி
இருந்தும் இல்லாதது
இவ்வெளி
துரு பிடித்தாலும்
எண்ணை போட்டு
துடைத்திருக்கும்
இவ்வெளி
அணுவுக்குள் அணு
இவ்வெளி
நாமும் அதனுள்
சிறுதுளி
சிறியதாய் இருந்தும்
பெருவெளி
நம் மனவெளி
என்னுள் நீங்கள்
உங்களுள் நான்
இது முடிவில்லா
பெருவெளி