மலைவாசிகள் ரகசியம்
இயற்கையின் எழிலுக்கு காவலாயும்
இயற்கையின் பொக்கிஷ ங்களாம் அருமருந்தாம்
மூலிகைகள் அத்தனைக்கும் காவல் காப்பு
தந்து வாழும் நம்நாட்டு மலை வாசிகள்-
இவர்சமூகத்தில் பெண்ணென்றும் ஆணென்றும்
யாதொரு பாகுபாடுகள் இல்லையாம்
இதுதானோ இவர்கள் எளிய வாழ்வில்
இவர்கள் கண்டு மகிழ்ந்திடும் சுகத்தின்
பெரும் ரகசியம் இது ஏன்
புரியலை நாகரீக நகரவாசிகள் நமக்கு

