உன் நினைவில் என் மேனியும் தினம் உருகுகிறது 555

***உன் நினைவில் என் மேனியும் தினம் உருகுகிறது 555***


உயிரானவளே...


உன்னுடன் நான்
இருந்த ஒவ்வொரு நாளும்...

என் வீட்டு
கண்ணாடி மட்டுமல்ல...

சாலையோரம் கண்ணில்படும்
கண்ணாடியில் கூட...

நான்
அழகாக தெரிந்தேன்...

நான் அணியும்
ஆடைகள் எல்லாம்...

என் மேனிக்கு
அழகாக பொருந்தியது...

காற்றில் கலைந்து செல்லும்
மழை மேகம் போல...

உன்னில் இருந்து
என்னை எறிந்துவிட்டாய்...

கண்ணாடி துண்டுகளாய்
என் இதயம் சிதறிக்கிடக்கிறது...

ஒவ்வொரு சிதறலிலும்
உன் முகம் மட்டுமே...

சாலையோர
கண்ணாடி மட்டுமல்ல ...

என் வீட்டு
கண்ணாடியும் நான் அழகில்லை...

என் ஆடைகளும்
எனக்கு பொருந்தவில்லை...

உன் நினைவில் என்
மேனியும் தினம் உருகுகிறது...

உன் நினைவுகள் மட்டும்
இதயத்தில் தினம் கூடுகிறது...

என்
புத்தம் புது பூவே...

என் வாழ்வில் வசந்தம்வீச
வந்துவிடடி நீ மீண்டும்.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (7-Mar-21, 9:40 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 527

மேலே