பாடம்

எரிந்துவெந்துக் குமுறிடுங்கால்
எரிமலையாய்த்தாய்ப்பூமியும்
நெருப்புப்புனல்கக்குவது
நீண்டயுக நியதிதானே...
அடிக்குமேல் அடிகள்பட்டு
அமுங்கியொடுங்கிடுங்கால்
சித்திரவதைகளைச் சிதைப்பதன்றோ
சரித்திரப்புரட்சிகள்தரும்பாடம்...???

எழுதியவர் : அமல்.சி.தேவ் (10-Mar-21, 1:10 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 51

மேலே