போராளி

பெரும்பாலோரின்
பேச்சுரிமைக்காய்
பேசிப்போராடினேன்.
புரட்சியாளனென்றார்கள்
பாகிஸ்தானியென்றார்கள்
பயங்கரவாதியென்றார்கள்
சிறையிலடைத்தார்கள்
சித்திரவதைசெய்தார்கள்
சின்னாபின்னமாக்கினார்கள்
சோர்ந்துபோனேனோ...?
செத்தேபோனாலுமே
சோர்வடையமாட்டேன்.
சுதந்திரமென்பதை
சொல்லால் செதுக்கி
சொத்துசேர்பவனல்ல;
சுதந்திரத்தையே
சொல்லிலுஞ்செயலிலும்
சுவாசித்து வாழ்பவன் நான்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (10-Mar-21, 1:21 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 70

மேலே