சுயவிவரம் பற்றிய சிறு துளிகள்

கவிஞனா?
காட்டுமிராண்டியா?
சந்தேகம்தானா?
சந்தேகமேதானா...??

என் கவிதைகள்
எக்கோணதிர்ப்பார்த்தாலும்
கண்ணகிகளுக்கு
கற்கண்டு;
மாதவிகளுக்கு
மரத்துண்டு...

காதல் டூயட்டுகள் பாட
கணமும் எனக்கு நேரமில்லை;
ஏனெனில் -
என் கண்களில் வடியும்
செந்நீரைத்துடைக்கா - என்
சாகும் நேச தேசத்துக்காய்
சில பொழுதுகளில் நான்
சோகராகங்களும் பாட வேண்டுமே...

கடவுள்நம்பிக்கையுள்ளவனாயென்று
கண்டுபிடிக்க எத்தனிக்காதீர்கள்;
மன்மதனென்றும் மனங்களில் எண்ணி
மதிமயங்கிவிடாதீர்கள்.

எம். ஜி. ஆர் அல்ல
என். டி யாருமல்ல நான்
எனக்காய் நீங்கள்
எமலோகம் செல்ல.

கவலைக்கல்லுடைக்கும்
கரத்தொழிலாளி நான்.
நம்பிக்கையெனும் நெம்புகோலை
நிமிஷமெல்லாம் நம்புபவன்.
துணிவெனும் துவாலையேயென்
துணியும் துணையம்...

ஊருடன் ஒத்துப்போகா
ஒற்றைமேகம்;
தனிமைக்காட்டிலும்
தைரியமாய்ப்பிரவேசிக்கும்
தென்னாப்பிரிக்க யானை;
தேசத்துக்காயும் தோகை போடா
தியாகமயிலும்தானோ...?

பசிக்காக இரந்து பெற்றதையும்
பலவேளைகளில் நான்
பாசியாய் அலையும்
பருந்துகளுக்கும்கூட
பகிர்ந்தளிப்பதுண்டு...

என்னை நேசிப்பவர்கள்
எண்ணிக்கையில் ஒருசிலரே:
சில சூரியன்கள்...
சில சந்திரன்கள்...
சில நட்சத்திரங்கள்...
சில மேகங்கள்...
சில கூழாங்கற்கள்...
சில கோமேதகங்கள்...
சில சிப்பிகள்...
சில சிலந்திகள்...

பாசப்பற்றுகளில்லா
பாலைகளிலும்
பரிதாப-நீருக்கு ஏங்காமல்
ஒட்டகம்போல்
ஓய்வுகளின்றி
ஒற்றையாய்ப்பயணிக்கும்
தியாகப்பயணங்களைத்
தேடித்தொடரும்
திராணியுண்டெனில்
தொடங்குங்கள் என்னுடனுங்கள்
தீர்த்தயாத்திரைகளை...!!!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (10-Mar-21, 1:55 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 58

மேலே