வெள்ளிக்கிழமை தரிசனம்

‘’வாரம் ஆறு நாட்கள் பூஜை உண்டு,
ஒரே ஒரு நாள் விசேஷ பூஜையுண்டு,
அம்மனுக்கும், எனக்கும்.

ஆறு நாட்கள் அவளை கான்பதுவுண்டு,
அந்த ஒரு நாளுக்காக நான் காத்திருப்பதும் உண்டு.

கோவில் நுழைவாயில் அவள் முதல் தடம்,
படியில் விழுகையில், ஆலையமணியோசையின்
ஒலியில் புரிந்து கொள்கிறாள்.

மற்றவர்க்கு புரியாதபடி,
புண்சிரிப்பலையில் என்னையும் புரிந்தும் கொல்கிறாள்.

குட்ட பூசாரியிடம் வாங்கிய திருநீரை,
அவள் இட்டு விட்டு, மீதியை எனக்காக,
கருவறை ஓரம் இட்டு வைக்கிறாள்.
அதை நானும் தொட்டும் வைக்கிறேன்.

சிறிதூரத்தில் கணேசனிடம் சேர்ந்தோம்.
முச்சுற்ற சுற்ற, முதல் சுற்றிலே காண்கிறேன்,
நிழநிலே என் நிலாவினினை.

நேர்கோடிட்டு, ஒற்றை ஜடை பின்னிய இடத்தில்,
நான் கொடுத்தனுப்பிய மல்லிகையும் ஒற்றை ரோஜாவும்,

அவள் கருவிழிக்கேற்ப கண்மையிட்ட இமைகளும்,
குழிவிழுந்த இடத்தில் அள்ளி பூசிய முக பூச்சுகளும்,
காதோரம் ஒட்டி உரசும் ஜிமிக்கி கம்மலும்,
இடை மடிந்து நவரசமூட்டும் கால் கொலுசும்,

என்னை திரும்பிப்பார்க்க அலைப்பெடுக்கும்
அவள் கைவளையல் ஓசைகளும்,
கற்சிலையாக தாவணியில் வலம்வருவது
அம்மனா, இல்லை என்னம்மனியா;

மீண்டும் சிறிதொரு பயணம்,
பெரிய கோவில் பூஜையும் முடிந்தது.
வெண்பொங்கலும் கிடைத்தது.

எனது பங்கு பொங்கலை அவளிடத்தில் கொடுத்து
கண்ணசைவில் காட்டிக்கொடுத்தார் குட்டபூஜாரி.

என் சுண்டு விரலும் அவள் மேனியில் வருடவில்லை,
என் உதடுகளும் அவள் உதட்டில் பேசவில்லை,
ஆனாலும் பேசிக்கொண்டோம், கண்விழிப்பார்வையிலும்,
காதல் கடித பரிமாற்றத்துடனும்,

எனக்காக, மழை ஓய்ந்த பின் ,
ஒற்றை கால் தடம் பதித்து செல்கிறாள்,
நானும் அவள் காலடி ஓரத்தில்
என் காலடியும் பதித்தும் செல்கிறேன்.

அவள் வீடு வருகிற நேரம், வாடாத ரோஜாவை
தானாக எடுத்து தரையிலமர்த்துகிறாள்,
அவள் முகமலர்ந்த இதழ் ரோஜாவை,
பெட்டியில் இட்டுவைத்து,
இரவில் கட்டில்லமர்த்துகிறேன்.

மீண்டும்,
வாரம் ஆறு நாட்கள் பூஜை உண்டு,
ஒரே ஒரு நாள் விசேஷ பூஜையுண்டு,
அம்மனுக்கும், எனக்கும்.


விசேஷ வெள்ளிக்கிழமை நோக்கி

வெள்ளூர் வை. க சாமி

எழுதியவர் : வெள்ளூர் வை. க சாமி (12-Mar-21, 2:42 pm)
சேர்த்தது : வெள்ளூர் வை க சாமி
பார்வை : 105

மேலே