என் இதயம் துடிப்பையும் நிறுத்தும் 555

என் இதயம் துடிப்பையும் நிறுத்தும் 555

***என் இதயம் துடிப்பையும் நிறுத்தும் 555 ***




ப்ரியமானவளே...



பறித்தால் சில
நாட்கள்
கழித்து
வாடிவிட...

நான் ரோஜா
மலர் இல்லையடி...

முகர்ந்தால் வாடி போகும்
அனிச்ச மலரடி என் இதயம்...

என்னை தூக்கி எரிய
உனக்கு எப்படி மனம் வந்தது...

எனக்கான புது வாழ்வை
அமைத்துக்கொள் என்கிறாய்...

கசங்கிய மலர் எப்போது
மீண்டும் சிரித்து இருக்கிறது...

கசங்கிய என் இதயம்
துடிப்பையும் நிறுத்தும்...

இறுதி துடிப்பும் உனக்காக
உன்னை நினைத்து மடியும்...

புத்தம் புது பூவே நீயும்
புது மாலை சூடி கொள்ளடி..

உன்
எண்ணம் போலவே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (17-Mar-21, 9:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1083

மேலே