சாகும்வரை சுகம்தான் சொல்லாத காதல் 555

***சாகும்வரை சுகம்தான் சொல்லாத காதல் 555 ***

என்னவளே...


என் மனதில்
இருக்கும் உன்னிடம்...

நேரில் சொல்லவில்லை
என் ஆசைகளை...

சொல்லாத காதல்
சாகும்வரை சுகம் என்றார்கள்...

கொள்ளாமல் கொள்ளும் விஷம்
என்று யாரும் சொல்லவில்லை...

மணமாலை
நீ சூடிய பின்பும்...

உன்னையே
என் மனம் நினைகுதடி...

முள்ளாய் குத்தும் உன் நினைவுகள்
என்னிடம் சொல்கிறது...

வாய்விட்டு
சொல்லி இருந்தால்...

நாம் மணமாலை
சூடி இருக்கலாம் என்று...

ரணமாய் உன் நினைவுகள்
என்னை கொன்றாலும்...

என் மனதில் நின்ற முதல்
பெண்ணோவியம் நீதானே.....


***முதல்பூ பெ. மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (20-Mar-21, 5:20 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1013

மேலே