காதலால் கைது செய்தவளே 555

***காதலால் கைது செய்தவளே 555 ***


என்னவளே...


பாறையான என் இதயத்தில்
காதல் என்னும் விதை தூவி...

மலர செய்தாய்
எனக்குள்ளும் காதலை...

மென்மையான
உன் இதயத்தில்...

நானும் அமைத்தேன்
காதல் என்னும் நந்தவனம்...

கடற்கரையில்
கட்டிய மண்வீட்டை...

அலைகள் அரிப்பதுபோல
உனக்குள் இருந்த என்னை...

எளிமையாக
வெளியே எறிந்தாய்...

பாறையில்
உதித்த காதல் மலர்...

இன்னும் உன்னை
நினைத்தே வாழுதடி...

மண்ணில் உன் நினைவுகளின்
அழுத்தம் தாங்காமல்...

உடைந்து சிதறுவதற்குள் என்னை
முழுமையாக சிறை எடுத்துவிடடி...

காதலால்
கைது செய்தவளே...

என்னை நீ
விடுதலையாக்கியது ஏனோ.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Mar-21, 5:10 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 487

மேலே