பேசி சிரித்த நாட்கள்தான் எத்தனை 555
***பேசி சிரித்த நாட்கள்தான் எத்தனை 555 ***
என்னவளே...
ஓடைகரை ஓரத்திலே ஓங்கி வளர்ந்த
ஒற்றை கருவேல மரம்...
வேலமர நிழலில்
நீயும் நானும்...
வேடிக்கையாக பேசி சிரித்த
நாட்கள்தான் எத்தனை...
யாரேனும்
வந்துவிட கூடுமோயென...
சுற்றும் முற்றும்
பார்த்து பேசி சிரித்த...
நாட்கள்தான்
எத்தனை சுகம்...
வருடந்தோறும் தழை உதிர்த்து
பூத்து குலுங்கும் கருவேல மரம்...
தழை உதிர்த்த மரம் போல
என் வாழ்வும் பட்டமரமாய்...
நீ என்னுடன்
இல்லாத இந்த வாழ்க்கை.....
[காட்சி பதிவு]
***முதல்பூ பெ. மணி.....***