உன் உள்ளத்தை தேடுகிறேன் 555
*** உன் உள்ளத்தை தேடுகிறேன் 555 ***
என்னுயிரே...
என் உள்ளத்தில்
இருக்கும் உன்னை...
நேரில் சந்திக்காமல் உன்னிடம்
பேசாமல் இருந்தாலும்...
என் உள்ளத்தில் நீதான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்...
இரவும் பகலும்
காணும் இடமெல்லாம்...
உன் முகம் மட்டுமே
நான் காண்கிறேன்...
கனவிலும்
நினைவிலும் தேடுகிறேன்...
உன் விழிகளை பார்த்துதான்
காதலை சொன்னேன்...
காதலெனும் பெயரில் உன்னிடம்
காமத்தை தேடவில்லை...
உன்
உள்ளத்தை தேடுகிறேன்...
நான் சிரிக்கும் நிமிடங்கள்
பொய்யாக இருக்கலாம்...
உன்னை நினைக்கும்
நிமிடங்கள் நிஜமானவை...
நீயாக என்னை
தேடிவரும்வரை...
உன்னை நான்
தொடரமட்டேன்...
உன் நினைவினில் வாழ்ந்து
கொண்டு இருப்பேன்.....
***முதல் பூ பெ.மணி...***