நீ கொடுத்த வலிகளை மறந்துவிட்டேன் 555

***நீ கொடுத்த வலிகளை மறந்துவிட்டேன் 555 ***


ப்ரியமானவளே...


காலங்கள்
வலிகளையும் ஆற்றும்...

எத்தனை உண்மை
என்பதை நானும் உனர்ந்தேன்...

நீ கொடுத்த
வலிகளை மறந்துவிட்டேன்...

உன் நினைவுகளை
மட்டும் மறக்க முடியவில்லை...

நம் பாதங்களை தழுவி
சென்ற கடல் அலைகள்...

எதுவென்று நம்மால்
பிரித்து பார்க்க முடியாது...

என் சுவாசத்தில் கலந்த உன்
நினைவுகளும் அதுபோலவே...

என்
சுவாசங்கள் நின்றாலும்...

எழுத்து வடிவில் உலாவரும்
பூமியில் உன் நினைவுகள்...

உன் கழுத்திற்கு வேறு கைகள்
மாலையிட உனக்கு சம்மதம்...

நானோ என் நினைவில்
இருக்கும் உனக்கு...

மணமாலை சூடி வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்...

உன் நினைவுகளோடு
கணவன் மனைவியாக...

நீ கொடுத்த
வலிகளை மறந்தேன்...

உன்
நினைவுகளை அல்ல.....


***முதல் பூ பெ.மணி...***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (30-Mar-21, 5:19 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1053

மேலே