உன் நினைவுகள் சுமையாக 555
***உன் நினைவுகள் சுமையாக 555 ***
என்னுயிரே...
என்னுடன் நீ இருந்த அழகான
அந்நாட்களை நினைத்து...
நான் மரணித்து
கொண்டு இருக்கிறேன்...
உன்னையும்
மறக்க முடியாமல்...
உன்னால் வளர்ந்த
காதல் பூக்களையும்...
உன் நினைவால் வளரும்
கல்லறை பூக்களையும்...
நான் கண்ணீரை
ஊற்றி வளர்க்கிறேன்...
உன்னைவிட உன் நினைவுகளே
எனக்கு சுகம் கொடுக்கிறது...
முதலில் என்னை
நான் நேசிக்காமல்...
உன்னை
நான் நேசித்துவிட்டேன்...
நீ என்னுடன்
இல்லை என்றாலும்...
என்னை நேசிக்கும் என் நிழல்
எப்போதும் என்னுடன் இருக்கிறது...
மரணம்வரை என்னை
தொடரும் என் நிழல்...
என்னுடனே
மரணிக்கும் எனக்காக...
உன்
நினைவுகள் சுமையாக...
என் நிழலோ
சுகமாக தனிமையில்.....
***முதல் பூ பெ.மணி.....***