அனாதையா நீ

மதம்தான் நம்கலாச் சாரம் நேசம்
தேசம் ஐம்பத் தாரா னாலும்
பாச மான மதமிந் துமதம்
இந்து என்று அயலான் சொல்வது
இந்தி யனைத்தான் அரபிய
இஸ்ரே லியரை அல்ல அங்கு
இருப்பது கிருத்து வயிஸ்லாம்
சிறுதே சத்திலும் மதமென உண்டாமே

ஆசிரியப்பா

பரந்து விரிந்த நாடுக ளிலுந்தான்
சிதறியே கிடக்கும் குட்டித் தீவும்
சாதியி னமற்ற நாடெது விளக்கு
மதமும் சாதியும் எதற்கு வேண்டாம்
மதசா தியிலா தான்அனா தியடா
குடியே றியமதத் தார்செய் குற்றம்
மதமிலா இடமெது மேதையே
ஒற்றுமை வளர்த்தது யிங்கே மதமே

ஆசிரியப்பா

ஆடு மாடு களின்பெயர் தெரியுமா
வாடும் மனித னின்பெயர் தெரியும்
காடுமே டிலேத் திரிந்திடும் மிருகம்
சாடுவர் பொதுப்பே ரில்மி ருகத்தை
ஏடுபார் முன்னோர் சொன்னதை
நாடுவீர் மதபக் திநாடைக் குறிக்கவே

ஆசிரியப்பா

மனிதா பிமானம் வேறு பக்தி
மதமும் வேறு குழப்பா தீர்கள்
கிருத்துவன் முஸ்லீம் தள்ளான் மதத்தை
திருடன் தன்சா திப்பிடித் திடாமல்
சாதியின் சலுகை வேண்டி
பாதியில் இருப்பான் ஏற்கான் மதமே

எழுதியவர் : பழனி ராஜன் (27-Mar-21, 5:29 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 256

மேலே