ஏமாற்றம்

வாழ்கையில்
யாரோ ஒருவரிடம்
ஏதோ ஒன்றை
ஏன் எதற்கு என்று
தெரியாமல்
எதிர்பார்க்க நேரிடலாம்
அந்த எதிர்பார்ப்பு
ஏதோ ஒரு வகையில்
ஏமாற்றத்தை தரலாம்
அந்த ஏமாற்றதால்
ஒருவிதமான
மாற்றம்
ஏற்படலாம்
அந்த மாற்றத்தால்
நம் வாழ்வில் ஏற்றம் ஏற்படலாம்...
ஆகையால் ,
ஏமாற்றத்தை ஏற்போம்...
ஏற்றத்தை காண்போம்...

எழுதியவர் : ~காயகீர்த்தி~ (2-Apr-21, 10:58 am)
சேர்த்தது : காயகீர்த்தி
Tanglish : yematram
பார்வை : 214

மேலே