அரசியல் - அறிவு + இயல்

எஜமானனை தெறிவு செய்ய
எத்தனிக்கும் அறிவியல்,
எக்குத்தப்பாய் எப்படியோ
ஏடாகூடமாகும் அரசியல்.

ஆனை மேலே ஆனை மாதிரி
அம்பானை போகுது பார்
அறிவு இருந்தும் இல்லாதது போல
அட்டகாசம் பண்ணுது பார்.

திருவிழா மாதிரி தெருவெங்கும்
ஓடுது பார் கூட்டம் எல்லாம்
ஓசிக்கும் காசுக்கும் கூடுற கூட்டம்
ரெண்டு கட்சி கூட்டத்திலயும் அவங்களே மாறி மாறி.

காண்ட்ராக்ட் ல கூட்டிட்டு வந்து கொண்டு போக
தினமும் ரேட் பேசி கூட்டுற கூட்டமெல்லாம்
ஓட்டா மாறுமா, மாறாது.

குடும்பத்துக்குள்ள கூட எவ்வளவு குடுத்தாங்கன்னு
பேசிட்டு இவன் அவன் இவ்வளவு தானான்னு
ஏசினாலும் பேசினாலும் பாதிக்கும் மேலே
பாதிக்காம தான் போடுவாங்க.

எந்த மாற்றமும் ஏமாற்றம் தான் ஏன் மாற்றம்
என்பதை புரிந்து கொள்ளாதவரை
நடமாட்டம் என்பதே தடுமாற்றம் தான்.
வேட்பாளனுக்கு ஆளுமையா வேட்டான்னு

தினம்தினம் யோசிச்சு சாவடிக்கிற அரசியல்
சங்கூத மட்டும் ஒரு மாசமாகும்
ஜெயிச்சா இருப்போம் இல்லைன்னா அவனவன்
அட்மிட் தான், கொரானா கூட கூடவே இருக்கே?

எழுதியவர் : செல்வமணி (2-Apr-21, 11:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 78

மேலே